Step into an infinite world of stories
தென் பாரதத்தில் திருச்சிராப்பள்ளி அருகே காவேரி நதி தனது இரு கரங்களையும் நீட்டி, ஸ்ரீரங்கம் எனும் ஓர் அழகிய தீவை அணைத்துக்கொண்டிருக்கிறாள். இங்கே ஸ்ரீ வைகுண்டத்தைப் புவியின் மீது இறக்கி வைத்தாற்போல் அமைந்திருக்கும் அரங்கனின் சந்நிதி காண்பவர் மனதை ஆட்கொள்ளும். இன்றிலிருந்து சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னால், பதினான்காம் நூற்றாண்டில், ஸ்ரீரங்கம் கோவிலை நோக்கி ஓர் பேராபத்து, தில்லி படையினர் ரூபத்தில் வருகிறது. ஸ்ரீரங்கத்து மக்கள் தங்களுக்குப் பிரியமான அரங்கனைக் காக்க அந்த அசுரப்படையை எதிர்த்து போர் புரிய முடிவெடுக்கிறார்கள். அந்த மக்களின் படையில், தான் பிறந்தது அந்த பெருமாளுக்காகவே என்று நினைத்து வாழும் வெள்ளாயி எனும் தேவதாசியும் அடக்கம். கடவுளைக் காக்க மனிதர்கள் மேற்கொண்ட போராட்டம் என்னவாயிற்று? வாருங்கள்... வெள்ளாயியுடன் நாமும் பிரயாணித்து ஸ்ரீரங்கத்து மக்கள் அரங்கனின் மீது கொண்ட அலாதியான அன்பினை உணர்வோம்!
||ஓம் நமோ நாராயணாய||
© 2020 Raja Saravanan (Audiobook): 9781662232404
Release date
Audiobook: 15 August 2020
Tags
English
India