Step into an infinite world of stories
Fiction
கோமல் சுவாமிநாதன் (1935 – 1995) ஒரு தமிழ் நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ் இலக்கிய இதழ் 'சுபமங்களா'வின் ஆசிரியராக இருந்தவர். தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராக கருதப்படுபவர்.
செக்கு மாடுகள், கோமல் சுவாமிநாதன் 1980ம் ஆண்டு எழுதி இயக்கிய நாடகம். விவசாயிகளின் துயரமான வாழ்க்கையையும் அவர்களை ஒடுக்கி ஆள நினைக்கும் நிலச்சுவான்தார்களின் போக்கையும் சித்தரிக்கும் நாடகம். அன்றைய கால கட்டத்தில் மிகவும் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட நாடகமாக கருதப்பட்டது.
உழைக்கும் விவசாயிகளின் குரலாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஒலிக்கிறது இந்த நாடகம் என்று பல பத்திரிகைகள் பாராட்டி எழுதின. 'இன்று அதிகம் விவாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்றை நாடகமாக உருவாக்குவதில் கோமல் சுவாமிநாதன் ஒரு புதிய பாதையை பின்பற்றியுள்ளார். தனது கதாபாத்திரங்களை மிகவும் நுணுக்கமாக உருவாக்கி அதன் மூலம் தன் வீரியமிக்க கருத்துக்களை முன்வைக்கிறார் கோமல்' என்று தி ஹிந்து நாளிதழ் பாராட்டியது.
நாடக மேடையை மூன்று பகுதிகளாக பிரித்து, ஒளியமைப்பின் மூலம் தேவையான காட்சிகளை அமைத்து புதுமையான அனுபவத்தைக் கொடுத்த நாடகம். ஒரே மேடையில் காவேரி படித்துறை, காடன் வீடு, சிவலிங்கம் வீடு என்று மாறிமாறி வரும் காட்சிகள் பார்வையாளர்களை பரவசமடையச் செய்தன.
பின்னர் இந்த நாடகம் கே. சங்கரின் இயக்கத்தில், விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க, 'சாதிக்கொரு நீதி' என்ற பெயரில் திரைப்படமாக 1981ம் ஆண்டு வெளியானது.
Release date
Ebook: 9 July 2025
Tags
English
India
