Step into an infinite world of stories
Fiction
இதுவரை எந்தக் கதைத் தொகுப்புக்கும் இப்படி எழுத வேண்டும் என நான் நினைத்ததில்லை. ஏற்கனவே இந்தக் கதைகளைப் பற்றி அணிந்துரையில் அண்ணன் எஸ்.வி இராசசேகரா அழகாக எழுதியுள்ளார். இந்த நிலையில் நான் கதைச் சுருக்கம் எழுதுவது என்பது ஒரு தங்கப் பெண்ணுக்கு ஒரு கவரிங் நகையை அணிவித்து பார்ப்பதற்கு ஒப்பாகும் என கருதுகிறேன்.
இந்தக் கதைகளைப் பொறுத்தவரையில் செக்குமாடுகளைப் போலவே முழுக்க முழுக்க எனது ஊரையேச் சுற்றிச் சுற்றி வருகிறது.அந்த ஊரில் என்னதான் இருக்கிறது.அதுதான் எனக்கும் தெரியவில்லை ஆனாலும் அதைவிட்டு மீறி என்னால் முடியவில்லை.அங்கு வாழ்ந்த மனிதர்களின் வீரம் திறமை மனிதம் அதேபோல அந்த மண்ணின் நிறம் மணம் குணம் அதில் விளையும் பயிர்கள்.அங்குள்ள விரிந்து பரந்த மலை அதில் உள்ள ஆறு பாறைகள். அந்த பாறைகளின் பெயர்களே வித்தியாசமாக வட்டப்பாறை வவுத்துப்பாறை கோணப்பாறை ஒன்னாம் நம்பர் பாறை இன்னொரு பாறை பெயர் இருக்கிறது அதை இங்கு எழுத முடியாது.ஆனால் அந்தப் பாறையைப் பார்த்தாலே இதற்கு இந்தப் பெயர் எழுதியது சரிதான் என நினைக்க வேண்டியிருக்கும்.இந்தப்பாறைகளுக்கும் எங்கள் ஊர் மனிதர்களுக்கு மிகப் பெரிய சங்கிலி இணைப்பு உண்டு.இவற்றையெல்லாம் என் கதைகளில் சொல்லியுள்ளேன். இதற்கே சங்கிலிப் பிணைப்பு என்றால் மனிதர்களுக்கும் இந்த மண்ணுக்கும் உள்ள பிணைப்பைச் சொல்லவா வேண்டும்.
இந்தத் தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் எமது மண்ணைப்பற்றியதாக இருந்தாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு கருவைக் கொண்டவை. அங்குள்ள எளிய மனிதர்களைப் பற்றி மட்டுமல்ல அந்தப் பகுதியில் மண் மரம் பறவை விலங்கு ஓடை உடைப்பு செடி கொடி மலை ஆறு இவைகளைப்பற்றி இதில் அந்த மக்களின் பேச்சு வழக்கில் எழுதியுள்ளேன்.இதை இதற்குமேல் விரிவுபடுத்தினால் கதைக்குள் செல்ல வேண்டியிருக்கும்.அப்படி நான் சென்றால் புத்தகத்திற்குள் நீங்கள் செல்ல மாட்டீர்கள்.எனவே நீங்கள் எனது கதையை வாசிக்க வழிவிட்டு விடைபெறுகிறேன்.
Release date
Ebook: 28 June 2025
Tags
English
India