Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் ஓங்கூர் ஆற்றங்கரையில் அமைந்துள்ள உப்பங்கழி நிலப்பரப்பான வெள்ளங்கொண்ட அகரம் இவரது பூர்வீகம்
தந்தையார்: தேசிங்கு .தாயார்: சின்னக்குழந்தை
தற்போது குடும்ப சூழல் காரணமாக அதே பகுதியில் கடுக்கலூர் என்னும் ஊரில் வசித்து வருகிறார்
கல்லூரி முடித்த கையோடு கவிஞர். அறிவுமதி அவர்களிடம் உதவியாளராக சேர்ந்து அவர் நடத்திவரும் "தை" கவிதை இதழின் உதவியாசிரியராக தன் இலக்கியப்பயணத்தை தொடங்கிய இவர் இதுவரை உடைமுள். முந்திரிக்காட்டு நட்சத்திரம். என இரண்டு கவிதை தொகுப்புகள் வெளி வந்துள்ளது
2012 ம் ஆண்டு சாகித்ய அகாடமி புதுதில்லியில் நடத்திய விழாவில் .இந்தி.உருது. மலையாளம். கன்னடம். தெலுங்கு...உள்ளிட்ட இந்திய மொழி படைப்பாளிகளில் தமிழ்நாட்டின் சார்பாக இடம் பெற்றவர்
பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவரின் கவிதைகள் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன
எந்த விதமான பாசாங்கும் இல்லாமல் உழைக்கும் மக்களின் வாழ்வை அப்பட்டமாய் திறந்து காட்டுபவை இவரின் எழுத்துக்கள்
காலச்சுவடு இதழில் வந்த இவரின் முதல் சிறுகதையான " வெள்ளங்கொண்ட அகரம்" பலராலும் பாராட்டப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது
இடைக்கழிநாட்டின் சுற்றுவட்டார பகுதிகளான. கடப்பாக்கம். கோட்டைக்காடு. வெண்ணாங்குப்பட்டு. மரக்காணம். சூனாம்பேடு போன்ற பகுதிகளை தன் எழுத்தின் களமாக கொண்டு இயங்கி வருபவர்.
நாவலும். சிறுகதை தொகுதிகளும் விரைவில் வெளியாக இருக்கிறது
தாமரை.இலக்கிய இதழின் துணையாசிரியராக சில காலம் பணிபுரிந்த முத்துவேல் தற்போது திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிவருகிறார்.
மனைவி: கீதா
குழந்தைகள்: மீரா. பிடல்காஸ்ட்ரோ
Release date
Ebook: 6 April 2020
English
India