Step into an infinite world of stories
Fiction
மொழிகளில் செம்மொழி
நம் தமிழ் மொழி
நிகழ்ச்சிக்கு அழைத்ததும்
இசைந்தது உமது விழி
கவிதையின் தலைப்புத்தான் சிரம்
அதில் அமைந்த உமது ஒவ்வொரு வரியும் தங்கம்
கவியே, நீர் எங்களுக்கு கிடைத்த வரம்
தமிழில் நீவீர் ஓர் அங்கம்
விலங்கினை உடைத்தெறியவும்
விளக்கத்தை கவியில் தறிக்கவும்
சொற்களால் தீயோரை சுட்டெரிக்கவும்
வரிகளால் வரியோரை கத்தரிக்கவும்
வந்திருக்கும் கவிஞருக்கு…. மிக அழகான வர்ணனை வரிகள் சிறப்பு வாழ்த்துகள் கவியே
புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.
ஒரு கருப்பொருளை காட்சியாகக் கொண்டு நம்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் எளிய வடிவம் புதுக்கவிதை இந்த புதுக்கவிதை உலகிற்கு புதுப்பாதை அமைத்த பெருமை கவியரசு நா.காமராசன் அவர்களையே சாரும். ஒரு கவிதை என்பது உன்னிடம் உன்னையே தருவது…. எனக் கவிதை என்றால் என்னவென்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாய் சொல்லி விட்டுப் போக..
இக்கவிதைகளை வாசித்து விட்டு எனக்கு கடும் விமர்சனம் தந்தாலும்… இல்லையெனில் எனக்கு முதுகில் ஒரு தட்டு தந்தாலும்… அல்லது எனக்கு சாமரம் வீசும் வாழ்த்து.
Release date
Ebook: 9 July 2025
Tags
English
India