Step into an infinite world of stories
Fiction
இளம் வயதில் தன்னுடைய கல்லூரி நாட்களில் ‘டிரக்’ எனப்படும் போதை மருந்துப் பழக்கத்திற்கு ஆளான ஒரு பெண்ணின் கதை இது. கல்லூரி வாழ்க்கையில் ஒரு மாணவனாகட்டும், மாணவியாகட்டும் நண்பர்கள் சேர்க்கை என்பது அவர்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைக்கக் கூடியது, நல்ல நண்பர்கள் சேர்க்கையால் படிப்பில் ஆர்வம் தூண்டப்பட்டு நல்ல மதிப்பெண்களுடன் தேறி, வாழ்வில் உயர்நிலை அடைந்தவர்கள் எத்தனையோ பேர். அதேபோல பிறப்பில் நல்ல குடும்பத்தில் பிறந்தாலும் வளர்ப்பில் நல்ல முறையில் வளர்க்கப்பட்டாலும், கெட்ட நண்பர்கள் சகவாசத்தால் பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, தன் பேரைக் கெடுத்துக் கொண்டது மட்டுமின்றி தன் பெற்றோருக்கும் தலைகுனிவைத் தேடித் தந்தவர்கள் எத்தனையோ பேர். இந்த நாவலின் நாயகி நிவேதிதாவும் நல்ல உயர்ந்த குடும்பத்தில் பிறந்து செல்வச் சீமாட்டியாய் வளர்க்கப்பட்டாலும் சில கெட்ட தோழிகள் சகவாசத்தால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையையே சீரழித்துக் கொள்கிறாள். மனைமாட்சி எனும் மாத இதழில் இந்த நாவல் வெளிவந்த போது ‘இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய கதை இது’ என பலர் விமர்சனம் எழுதி இருந்தார்கள்.
பொதுவாக நாவல்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு எழுதப்படாமல் ஏதேனும் ஒரு படிப்பினையைத் தருவதாக அமைய வேண்டும் என்று என்னுள் எப்போதும் ஆழமான ஒரு எண்ணம் உண்டு. அந்த எண்ணத்தின்படியே இந்த நாவலை வடிவமைத்திருக்கிறேன் .
இந்நாவலைப் படிக்கும் வாசகர்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கீதா தெய்வசிகாமணி
Release date
Ebook: 3 August 2020
English
India