Step into an infinite world of stories
Romance
நாகர்கோவில் அருகில் உள்ள அருணாச்சலா பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் நாயகி, தனது கல்லூரி படிப்பு நிறைவு பெற்றதும், பெங்களூரில் உள்ள கெளதம் நிறுவனத்திற்கு வேலை தேடி செல்ல, தனது பேராசிரியர் பிரவீனின் உதவியை நாடுகிறாள்.
அவன் மனதில் இருப்பது தெரியாமல் அவள் தனது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்த, அவளை ஒரு தலையாக விரும்பும் ஆசிரியர் பிரவீன் வேறு வழியற்று அனுப்பி விட்டு, தனது நண்பனின் மூலம் அவளது பாதுகாப்பையும் பலப்படுத்துகிறான்.
பணி நிமித்தம் வெளிநாட்டிற்குச் சென்று வரும் கௌதம், அலுவலகத்தில் புதியதாக வந்திருக்கும் பி.ஏவான கெளரியை தனக்கு கீழே கொண்டு வருகிறான். அவர்களின் பார்வை, பேச்சுக்களைப் பார்க்கும்போது, ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் போலத் தெரிகிறது. ஆனாலும், இருவரும் விலகியே இருக்கிறார்கள்.
அந்த நேரம் அவனது வாழ்க்கையில் இடைபுகும் பிரியங்காவினால் அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் உருவாகிறது. கௌதம் மணப்பது யாரை? பிரியங்கா எதனால் தொடர்ந்து இன்னல்களை உருவாக்கி வருகிறாள்? பிரவீனின் ஒருதலைக் காதல் நிறைவேறுகிறதா? கௌதமை அழிக்க நினைப்பது யார்? சஞ்சய், பவித்ராவின் நிலை போன்றவற்றை நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Release date
Ebook: 28 June 2025
English
India