Step into an infinite world of stories
Fiction
பல்வேறு இலக்கியச் சேவைகள் ஆற்றி வரும் Pachyderm tales நிறுவனத்தார் தற்போது மூத்த குடிமக்களின் சிந்தனைகளுக்கு மதிப்பளித்துப் போற்றும் விதமாக ஏழு மூத்த குடிமக்களின் படைப்புக்களைக் கோர்த்து "வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று மாலையாக்கிக் கொடுத்துள்ளார்கள்.
இதன் கதாசிரியர்கள் ஏழுபேரும் வெவ்வேறு விதமான கதைக் கருக்களை வெவ்வேறு களங்களில் கையாண்டிருக்கும் விதம் நிச்சயமாக அனைவராலும் பாராட்டப்பெறும்.
"தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப்போலே - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?"
என்று கேட்கும் இந்த மூத்த குடிமக்களின் கதைகளின் தொகுப்பு உங்கள் கைகளில் தவழ்கிறது. படித்து மகிழ்வோமே!
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
Release date
Ebook: 7 September 2023
English
India