Step into an infinite world of stories
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ‘பெயர்' என்பது இன்றியமையாத ஒன்று. மகத்தான வாழ்வு வாழ்ந்தாலும் சரி, தாழ்ந்தாலும் சரி அவனை அடையாளப்படுத்த நாம் பயன்படுத்தும் சொல் அவனது பெயர் ஒன்றே. ஒருவன் என்னதான் முயற்சி செய்தாலும் மாற்ற முடியாதது அவன் பிறந்த நாள், மாதம், வருடம். அது அவனது விதிப்பயன்படி அமைந்திருக்கும்-அந்த விதியை மதிநுட்பத்தால் சற்று மாற்றி அமைத்து மேம்படுத்த முடியுமா? என்று சிந்தித்ததன் விளைவே இந்த எண் கணித ஆராய்ச்சி எனலாம். அவரவர் உடல் எண், உயிர் எண்ணிற்கு ஏற்ப அந்தந்த கிரக ஆதிக்க எண் வருமாறு பெயர் வைத்துக் கொண்டால், அல்லது ஏற்கனவே வைத்த பெயரில் சற்று மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் தங்கள் வாழ்க்கையை வளமும், நலமும் நிறைந்ததாக ஆக்கமுடியும். இதன் அடிப்படையில் உங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டலாம். உங்கள் வசதிக்காக ஆண் குழந்தைக்கான பெயர்கள் 1000, பெண் குழந்தைக்கான பெயர்கள் 1000, இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
Release date
Ebook: 30 September 2020
English
India