Step into an infinite world of stories
Religion & Spirituality
சைவம் செழிக்கப் பாடுபட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களுள் பதிமூன்று பேர் வேளாண் மரபினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இளையான்குடி மாறனார், விறன்மிண்ட நாயனார், மானக்கஞ்சாற நாயனார், அறிவாட்டாய நாயனார், திருநாவுக்கரசர் சுவாமிகள், மூர்க்க நாயனார், சாணக்கிய நாயனார், கலிக்கம்ப நாயனார், சக்தி நாயனார், வாயிலார் நாயனார், முனையடுவார் நாயனார், செறுத்துணை நாயனார், கோட்புலி நாயனார் ஆகிய பதின்மூவரும் வேளாண் மரபைச் சேர்ந்தவர்கள்.
சைவத்துக்கும் தமிழுக்கும் வேளாண் மரபினர் செய்த தொண்டு அளப்பரியது. சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றி வருபவர்கள். தமிழ் இலக்கிய வரலாற்றிலும் வேளாண் மரபினருக்குப் பெரும் இடமுண்டு. அத்தகைய தொன்மை மிக்க சிறப்பு மிக்க வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாகிய வேளாண் மரபில் வந்த நாயன்மார்கள் பதின்மூவரின் வரலாற்றை, தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்தில் உள்ளபடி, புதுக்கவிதை நடையில் எழுதி வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சைவத்தையும் தமிழையும் போற்றிவரும் மரபினர் எனது இந்த நூலையும் வரவேற்று மகிழ்ந்து ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். பெரிய புராணத்தைப் படித்துப் புரிந்து கொளாதவர்களுக்கு இந்நூல் உதவியாக இருக்கும் என்பதோடு, மூல நூலான பெரிய புராணத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நம்புகிறேன்.
இரா. குமார்.
Release date
Ebook: 3 August 2020
English
India
