Step into an infinite world of stories
Religion & Spirituality
கொங்குமண்டல சதகத்தில் உள்ள பாக்களையும் அது கூறும் வரலாறுகளையும் விவரித்து முதல் இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன.
முதல் பாகத்தில் 32 வரலாறுகளும் அடுத்த பாகத்தில் 35 வரலாறுகளும் விவரிக்கப்பட்டன. இந்த மூன்றாம் பாகத்தில் மீதியுள்ள வரலாறுகள் விவரிக்கப்படுகின்றன.
இந்த பாகத்தில் அகத்தியர் காவிரியை உற்பத்தி செய்தது, திருஞானசம்பந்தர் நளிர் ஜுரம் நீக்கியது ஆகிய வரலாறுகள் உள்ளன. அத்துடன் கரூர் என்று இன்று வழங்கப்படும் திரு ஆநிலை, திரு அவிநாசி, பேரூர், துடியலூர் ஆகிய தலங்களின் மகிமைகளும் அற்புத வரலாறுகளும் விவரிக்கப்படுகின்றன. அடுத்து அதியமான், ஓரி, பவணந்தி முனிவர், படிக்காசுப் புலவர் ஆகியோரது வரலாறுகள் உள்ளிட்ட பல சிறந்த புலவர்கள், மன்னர்கள், வீரர்கள் ஆகியோரின் சரித்திரமும் விளக்கப்பட்டுள்ளது. தமிழர் படித்து பெருமைப்படத்தக்க விதத்தில் உள்ள தமிழ்ப் புலவர்கள் மற்றும் மன்னர்களின் வாழ்க்கையில் நடந்த வியத்தகு சம்பவங்களை அனைவரும் படிக்கலாம்; பிறருக்குப் பரிசாகவும் கொடுத்து மகிழலாம்.
Release date
Ebook: 10 April 2024
English
India
