Step into an infinite world of stories
Fantasy
இந்த நாவல் பௌத்தத் தத்துவம் சொல்லும் வாழ்வியலைக் காட்சி வடிவத்தில் துல்லியமாய் உணர்த்திச் செல்கிறது. எல்லாவற்றையும் அர்ப்பணித்துவிட்டு எல்லாமும் பெற்றுக்கொண்டு விடுகிற ஒரு மனிதனைப் பற்றிய கதை இது. அந்த வாழ்வியல் தத்துவத்தை நோக்கிப் படிப்படியாய்ப் பயணித்து மனது பக்குவத்தின் முழுமை எட்டுவதை, நான்கு காலங்களைக் குறியீடாய்ப் பொருத்தி அற்புதமான வாழ்வியல்ப் படிமமாய் அக்கதாபாத்திரம் பரிணாமம் கொள்கிறது.”கிம் கி டுக்” கொரிய மொழியில் எழுதிய “sஜீக்ஷீவீஸீரீ suனீனீமீக்ஷீ ணீutuனீஸீ ஷ்வீஸீtமீக்ஷீ ணீஸீபீ sஜீக்ஷீவீஸீரீ' திரைக்கதையை அடியற்றி இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
பௌத்தத்தின் முக்கிய அம்சம் ஆசையைத் கடந்து விடுவதென்பது. இந்த நாவலில் காமயிச்சையிலிருந்து முளைக்கும் உறவு கொலை பாதகம்வரை கொண்டுபோய் விடும் என்பது ஒரு குறியீடாய் உணர்த்தப்படுகிறது. ஆசைப்பட்டு அடைய முடியாததை அல்லது உடமையாக்கிக் கொள்ள முடியாததை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் அல்லது அழித்துவிட வேண்டும் என்கிற உன்மத்தம் அந்த மனதை ஒரு கணத்தில் சிறைப்படுத்திக்கொள்கிறது. காமம் இச்சைக்குரியவர்மேல் ஏற்படுத்துகிற ஈர்ப்பு அதனை ஒரு கட்டத்தில் இழக்க நேர்கிறபோது அல்லது யாரும் யாரையும் ஆத்மார்த்தத்தில் உடமையாக்கிக்கொள்ளவே முடியாது என்கிற உண்மை உரைக்கிறபொழுது அதன் இயலாமை ரௌத்ரம் கொண்டு கொலை வரைக் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
ஒரு கட்டத்தில் அவன் தன்னைத்தானே குருவாக உருவகித்துத் தன்னையே அடக்குற மனநிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்கிற ஞானத்தைப் பௌத்தத் தத்துவம் அவனுள் கற்பிக்கிறது. அவன் தன்னை உணர்கிறான். தன்னை உணர்ந்து அதனிலிருந்து பிரபஞ்சத்தை உணர்கிறான். இந்த நாவல் பௌத்தத் தத்துவத்தை அற்புதமாய் சொல்லிச் செல்வதோடு அதையும் தாண்டிய நமக்குள்ளான தத்துவார்த்தத் தேடலின் ஒளியை ஏற்றிச் செல்கிறது.
புத்தர் ஒரு முறை ஒரு கடையில் யாசகம் வேண்டிச் சென்றிருக்கிறார். ஒருவர் எகத்தாளமாய்ப் புத்தரைத் திட்டியிருக்கிறார். புத்தர் சிரித்துக்கொண்டேயிருந்திருக்கிறார். அவருக்குப் புரியவில்லை. புத்தரிடமே காரணம் கேட்டார். புத்தர் பதிலுக்குக் கேட்டார். உங்கள் கடையில் ஒரு பொருள் வாங்க வருகிறேன். நீங்கள் தருகிற பொருள் எனக்குத் தரமானதாகத் தெரியவில்லை. ஆதலால் அதனை வாங்க மறுத்து விடுகிறேன். அப்படியென்றால் அந்தப் பொருள் யாருக்குச் சொந்தம் என்று கேட்கிறார். கடைக்காரர் எனக்குத் தான் என்கிறார். இப்போது தாங்கள் பேசிய வார்த்தைகள்கூட அப்படித்தான் என்றிருக்கிறார் புத்தர்!முயற்சித்த விசயம் கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால் ரொம்ப நல்லது. இரண்டு பக்கமும் அனுபவம் லாபமே. இரண்டு பக்க அனுபவங்களும் வெவ்வேறு வகையில் இந்த சமுதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு பயன் பெற்றுக்கொள்ள இயலும்.
Release date
Ebook: 3 January 2020
English
India
