Step into an infinite world of stories
Language
உலகப் புகழ்பெற்ற கவிஞர்கள், கதாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள் ஆகியோரின் வாழ்க்கைச் சரிதத்தைப் படிக்கையில் நமக்கும் உற்சாகம் பிறக்கும்; எழுதத் தோன்றும். ஆனால் புகழ் பெறுவதற்கு முன்னால் அவர்கள் பட்ட கஷ்ங்களை அறியும்போது பாரதியாரின் நினைவு நமக்கு வரும்; இறந்த பின்னர்தான் பலரும் புகழ் பெற்றுள்ளனர். சிலர் மட்டுமே ‘தோன்றிற் புகழோடு’ தோன்றியவர்கள்; மீனவர் மகனும், விவசாயி மகனும் கதை எழுதி புகழ் பெற்றனர். சிலர் எழுத்தின் காரணமாக சிறை சென்றனர். இங்கர்சால் போன்றோர் கடவுள் எதிர்ப்புப் பிரசாரம் செய்தபோதிலும் நேர்மையான வாழ்க்கை நடத்தினர்.
கடவுள் எதிர்ப்பு சொற்பொழிவுகள் மூலம் காசு சம்பாதிக்கவில்லை. ரூஸோ, கார்க்கி முதலிய எழுத்தாளர்கள் பெரிய புரட்சிகளுக்கு வித்திட்டனர். பல கவிஞர்கள், கட்டுரையாளர்கள் இந்துமதக் கருத்துக்களால் ஊற்றுணர்ச்சி பெற்றனர்.
Release date
Ebook: 19 December 2022
Tags
English
India
